தேவையான பொருட்கள்
அரை கிலோ கேரட்
4 ஸ்பூன் நெய்
10 முந்திரி
8 திராட்சைகள்
1 கப் பால்
அரை கப் சர்க்கரை
செய்முறை: கேரட்டை நன்றாக கழுவ வேண்டும். அதை துருவி எடுத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, திராட்சைகளை சேர்த்து வறுக்க வேண்டும். நிறம் மாறியதும் அதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் பால் சேர்த்து, நன்றாக வேக வைத்துகொள்ளவும். சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேர்த்து கிளரவும். இதை தொடர்ந்து கிளர வேண்டும். நன்றாக இலகிய பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அதில் வறுத்த முந்திரி, திராட்சைகளை சேர்த்து கொள்ளுங்கள். சூப்பரான கேரட் அல்வா ரெடி.