விஜய் தேவரகொண்டா வீட்டில் தீபாவளி?
ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ராஷ்மிகா தற்போது தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது விஜய் தேவரகொண்டா வெளியிட்ட புகைப்படங்கள் உடன் ஒத்து போவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதனால் இருவரும் ஒன்றாக தான் தீபாவளி கொண்டாடினார்களா என கேட்டு வருகின்றனர்.