சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள தற்காலிக தடை காரணமாக 2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏல நடவடிக்கையில் இருந்து இலங்கை வீரர்களை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை உரிய திகதிக்குள் நீக்கப்படாத நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.