கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நேற்று தீபாவளி முடிந்ததையடுத்து சுமார் 1,350 டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் அவற்றை அகற்றப்பட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாளா வழக்கத்தைவிட கூடுதலாக குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும் நேற்று தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் சுமார் 1,350 டன் குப்பை சேர்ந்துள்ளதாகவும், இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.