விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்த வீடியோ ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். அதாவது அந்த வீடியோவில், விக்னேஷ் சிவனுக்கு பேரிச்சம்பழத்தை கொடுப்பார் பிரதீப்.
இதை பெற்றுக்கொண்ட விக்னேஷ் சிவன் ‘தேங்க் யூ ஃபார் தி டேட்ஸ்’ என்பார். இதில் கால்ஷீட் கொடுத்ததற்கு நன்றி என்பதை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார். இருவரும் இணையும் இந்த புதிய படத்தை தொடக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் படத்தை ‘லியோ’வை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனுடன், எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.