வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அப்டேட்
வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப் சேனல்களுக்கு அட்மின்களை நியமிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
சமீபத்தில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தகவல்களை நேரடியாக பயனர்களுக்கு வழங்கும் வகையில் வாட்ஸ் அப் சேனல் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் கூடுதல் அம்சமாக நிறுவனத்தின் சேனல் ஓனர்கள் தங்கள் சேனலுக்கான புதிய அட்மின்களை நியமிப்பதற்கான அனுமதியை விரைவில் வழங்க உள்ளதாக WABetaInfo அறிக்கை வெளியிட்டது.
இன்போ திரையில் வரக்கூடிய புதிய ஆப்ஷனை பயன்படுத்தி சேனல் ஓனர்கள் புதிய அட்மின்களை தங்களது சேனலில் நியமிக்கலாம்.
இந்த அப்டேட் மூலமாக சேனல் ஓனர்கள் தங்களுடைய கண்டன்ட்களை பகிர்வது மற்றும் நிர்வகிப்பது ஆகிய வேலைகளை தங்களுடைய புதிய அட்மின்களுக்கு வழங்கலாம்.
இதன் மூலம் சேனலின் கட்டுப்பாடு மற்றும் வேளாண்மையை அதிகரிக்க பெரிதும் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓனர்கள் நியமிக்கும் சேனல் அட்மின்களின் பட்டியல் எப்போதும் பிரைவேட்டாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.