1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஹீரோ அரவிந்த டி சில்வா கௌரவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அரவிந்த டி சில்வா, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் “ஹோல் ஒஃப் ஃபேம்” குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், இன்று(13.11.2023) ஹோல் ஒஃப் ஃபேமிற்கான மூன்று புதிய அங்கத்தவர்களை அறிவித்திருந்தது.

குறித்த பட்டியலில் இந்தியாவின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், வீரேந்திர சேவாக், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி மற்றும் இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் அடங்கியுள்ளனர்.

1996 இல் இலங்கையின் அணியில் இடம்பெற்று ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த அரவிந்த டி சில்வா, 18 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 20 டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளார். மேலும், 50 ஓவர் கிரிக்கெட்டில் 11 சதங்களை பெற்றுள்ளார்.

இந்தநிலையில் 1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், அரவிந்த டி சில்வா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 107 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *