அவ்வகையில் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“காசா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது.” என்றார்.