‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, அடுத்து ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 & 3 மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தாலும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில், மாயா டீம் குறித்து முன்னாள் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே சமூகவலைதளங்களில் பிரதீப்க்கு ஆதரவாக கருத்துக்கள் பரவி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகியோர் கூட்டணி பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
இதனால் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்க காரணமாக இருந்த மாயா பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் உள்ள டீம் விசித்ரா மற்றும் மாயா டீமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் களேபரம் ஆகியுள்ள நிலையில், மாயா மற்றும் அவரது டீம் குறித்து முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான ரச்சிதா மகாலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.
‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, அடுத்து ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 & 3 மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்றார். தனது சக நடிகரான தினேஷை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரச்சிதா, கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது வீசனில் பங்கேற்று 91 நாட்கள் இருந்தார்.
இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும் நடப்பு சீசனில், பிரதீப்புக்கு ஆதரவாக விசித்ரா குழுவுடன் தினேஷ் ஆதரவாக நின்று வருகிறார். மறுபுறம், மாயாவின் கும்பல் விசித்ரா குழுவை தோற்கடிக்க கடுமையான உத்திகளைப் பயன்படுத்துகிறது.
இந்நிலையில், சமீபத்தில், வைரலான ஒரு வீடியோவில், மாயாவும் பூர்ணிமாவும் தினேஷை எவ்வாறு எதிர்கொள்வது என்று விவாதித்தனர். ரச்சிதாவுடனான தனது திருமண வாழ்க்கையைப் பற்றித் பேசி, அவரை ஆறுதல்படுத்துவதன் மூலம் தினேஷை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று மாயா பூர்ணிமாவிடம் கூறுவதை கூறுவது போன்ற ஒரு க்ளிப் வெளியாளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி பிக் பாஸ் 7 இல் உள்ள ஆண்கள் பாதுகாப்பற்றவர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே தற்போது பிக்பாஸ் 7 குறித்தும் மாயா டீம் குறித்து நடிகை ரச்சிதா வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் கருணையை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீங்க. என் பர்ஸ்னல் லைஃப் பத்தி பேச அங்க யாருக்கும் உரிமை கிடையாது. தகுதியும் கிடையாது. எப்பவுமே அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும் வலியும் வேதனையும். நமக்கு நாமே காரணங்கள், நம் சொந்த பிரச்சனைகள், நம் சொந்த விஷயங்கள் சமாளிக்க என்னோட டேக் யூஸ் பண்ணி யாரு விளையாட வேண்டாம் உங்களுக்கக விளையாடுங்க