நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டன், லூசா பிரிவை சேர்ந்த ஆண்டி மாணிக்கம் என்பவர் நேற்றைய தினம் கொழும்பு மட்டக்குளியவில் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) கண்டுபிடிக்கப் பட்டுள்ளார்.
வத்தளை பகுதியில் வைத்து அவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவரை கண்டுபிடிப்பதற்காக சமூகவலைத் தளங்களில் பதிவான செய்திகளை பகிர்ந்தமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஊடகங்கள் அனைவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.