மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகள் சனிக்கிழமை (11) இரவு மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய சம்பவதினமான இரவு 7 மணியளவில் இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் செப்பின் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த 58 ரி.56 ரக துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
( கனகராசா சரவணன்)