சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியை தொடர்ந்து இந்த தண்டனையை அவர் பெற்றுள்ளார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
குறித்த நேரத்தை விடவும், பந்து வீச குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் போட்டியில் அவர் தாமதமாக பந்து வீசியதற்காக 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அணியில் இம்பேக்ட் வீரர் உள்பட மற்ற வீரர்களுக்கு 6 லட்ச ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் பௌலிங் முடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சுப்மன் கில்லுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.