நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் தொடக்கியது.
லைகா படத்தின் நிதி நெருக்கடி காரணமாக நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
திரிஷா இல்லன்னா நயன்தாரா, பகதீரா, மார்க் ஆண்டணி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிசந்திரன், தற்போது அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். மே மாதம் முழுவதும் இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹைதராபாத்தில் நடக்கும் இந்த முதற்கட்ட ஷூட்டிங்கில், படத்தின் முதல் பாடலையும், ஒரு சண்டை காட்சியையும் படமாக்க உள்ளதாகவும், அது முடிந்த பின்னர் ஜூன் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்குமாருக்கு 3 லுக்குகள் இருப்பதாகவும், இறுதிகட்ட படப்பிடிப்பில் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.