தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் ‘அடங்காத அசுரன்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சுதீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த பாடலை தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக உள்ளார். இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு உறுதி செய்துள்ளது. தனுஷ், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து முதல் முறை பாடியுள்ளது இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.