2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் நடாத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.