மத்திய மாகாணத்தில் நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகளை ஆராயும் விசேட வேலைத்திட்டம் ஆளுநர் லலித் யு. கமகே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பரம்பரை காணி உறுதிப் பத்திரங்களின் இரண்டாம் கட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பிரதேச செயலக மட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க இணையத்தள தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், மத்திய மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மதஹபொல, பிரதம மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத், மத்திய மாகாண காணி ஆணையாளர் மனோஷா விஜேதுங்க, மத்திய மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்