மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் கல்வியும் தர மேம்பாட்டிற்கும் பொறுப்பான உப பீடாதிபதி திருமதி.மணிவண்ணன் தலைமையில் தலைமையில் இரத்ததான நிகழ்வு கல்லூரியின் வளாகத்தில் (08) திகதி நடைபெற்றது.
“உதிரம் கொடுத்து உயிர் கார்ப்போம்” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆர்வமாக விரிவுரையாளர்கள், மாணவர்கள் இரத்த தானத்தினை வழங்கினர்.
இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் உதிரம் குறைந்த அளவில் கையிருப்பு உள்ளதை அறிந்து மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியினால் உதிரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.