நுவரெலியா மாவட்ட மனநல முதலுதவி குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவூட்டும் பயிற்சி நிகழ்ச்சி நேற்று (08) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுஜீவா போதிமான்ன தலைமையில் இடம்பெற்றது.
அவசர காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறு மன மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து உரிய திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு தேவையான பரிகாரங்களை வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட உள சமூக குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட அவர்களின் முழு வழிகாட்டலின் பேரில் நுவரெலியா மாவட்ட உளவியல் சமூகக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட உளவியல் பிரிவின் கீழ், மாவட்ட வனிதா அபிவிருத்திப் பிரிவின் கீழ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் நுவரெலியா மாவட்ட அலுவலகம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அனர்த்த நிவாரணப் பிரிவு, மாவட்ட சமூக சேவைப் பிரிவு, மாவட்ட மத்தியஸ்தப் பிரிவுகளின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்து கொண்டதுடன் சமூக நலன்புரி அமைப்பு நிதியுதவி வழங்கியது.
மஸ்கெலியா நிருபர்.