உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் தக்லைப். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தக்லைப் திரைப்படம் இந்தாண்டே திரையில் வெளியாக இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாயகன் என்ற படத்திற்கு பிறகு மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி 36 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். இதன் காரணமாகவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. கடந்தாண்டு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தேர்தல் வேலைகளை முடித்துவிட்டு கமல் தற்போது தக்லைப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
தக்லைப் திரைப்படம் இந்தாண்டு இறுதியிலேயே வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. அதாவது தக்லைப் திரைப்படம் 2024 ஆம் ஆண்டே வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தக்லைப் திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என பேசப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.