சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ அணி படுமோசமாக தோற்றது.
இப்போட்டி முடிந்தப் பிறகு, பவுண்டரி லைனில் கே.எல்.ராகுலை சந்தித்த, லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தார்.
அதிக நேரம் கையை ஆட்டிக் கொண்டே, கே.எல்.ராகுலை பார்த்து கத்திக் கத்திப் பேசிய நிலையில். கே.எல்.ராகுல் அமைதியாக, தலைகுனிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தார். இது, கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.