மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நிகழ்வினை (08) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி .எம். முபாறக் அவர்களின் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் நடாத்தியது.
மூதூர் தளவைத்தியசாலையினுடைய வைத்தியர் என். நிப்ராஸ் மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வைத்திய முகாமை நடத்தி இருந்தார்கள். இதன்போது நீரிழிவு, இரத்த அழுத்தம், தொற்றா நோய்கள், கொலஸ்ட்ரோலுக்கான இரத்த பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையினுடைய செயலாளர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச அலுவலகங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.