ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
யாழ்ப்பாணத்து கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் SRH அணி மூலம் தனது கன்னி போட்டியில் அறிமுகமானார்.
62 பந்துகளை மீதம் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 1 மணி நேரத்திற்குள்ளாக ஆட்டத்தை முடித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பவர் ப்ளேயான 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 107 ரன்கள் குவித்திருந்தது.
ஐபிஎல் தொடரில் 160 க்கும் அதிகமான ரன்களை 10 ஓவர்களுக்காக சேஸிங் செய்த முதல் அணி என்ற ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
62 பந்துகளை மீதம் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 1 மணி நேரத்திற்குள்ளாக ஆட்டத்தை முடித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பவர் ப்ளேயான 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 107 ரன்கள் குவித்திருந்தது.
ஐபிஎல் தொடரில் 160 க்கும் அதிகமான ரன்களை 10 ஓவர்களுக்காக சேஸிங் செய்த முதல் அணி என்ற ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ்.
இதன்பின்னர் லக்னோவின் ரன் குவிப்பு வேகம் வெகுவாக குறைந்தது. ஒருநாள் போட்டியை போல கேப்டன் ராகுலும், க்ருணல் பாண்டியாவும் விளையாடினர். ராகுல் 33 பந்தில் 29 ரன்களும், பாண்ட்யா 21 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 11.2 ஓவர்களில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறிக் கொண்டிருந்தது.
இதன்பின்னர் இணைந்த நிகோலஸ் பூரன் – ஆயுஷ் பதோனி இணை பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தது. பதோனி 30 பந்தில் 50 ரன்னும், பூரன் 26 பந்தில் 48 ரன்னும் எடுத்தனர். இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களம் இறங்கினர்.
இருவரும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாச ஸ்கோ எகிறத் தொடங்கியது. முதல் ஓவரில் மட்டும் 8 ரன்கள் சேர்த்த ஐதராபாத் அணி அடுத்தடுத்த ஓவர்களில் குறைந்தது 15க்கும் அதிகமான ரன்களை குவித்தது.
இதனால் பவர் ப்ளேயான 6 ஓவர்களில் ஐதராபாத் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் 107 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியுமாக பறக்க விட்ட சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் தலா 8 பவுண்டரி, சிக்சருடன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.