நிகழ்வில் கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம்
சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி நேற்று (08) புதன்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அங்கு இடம்பெற்றுவரும் “சவூதியின் ஒளி” இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார்.
மேலும் அம்பாரை மாவட்டத்திலுள்ள கண்புரை நோயாளர்கள் பயனடையும் வண்ணம் சத்திர சிகிச்சை முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்வது தொடர்பிலும், அபிவிருத்தி பணிகளுக்காக சவுதி அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் தூதுவருடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்கள் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத், சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் ‘நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம் நிறுவனத்தின் பணிப்பாளர் கண் சத்திர சிகிச்சை நிபுணர் அப்துல் கரீம், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் எஸ் எஸ்.எம் ஜாபீர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.