மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று இடம் பெற்றது.
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் 19வது பொதுப்பட்டமளிப்பு விழா நிகழ்வானது இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அதாவுட செனவிரத்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (07) திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பில் உயர் தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்த சுமார் 300 மாணவ, மாணவியர்கள் இதன் போது பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் அவர்களின் தலைமையில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பில் கடந்து 5 வருடத்திற்கு மேலாக அரச இலாபகரமான நிறுவனமாக இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
இவ் நிறுவகத்தில் கல்வி கற்ற இளைஞர்கள் பலர் சுய தொழில் முயற்சியாளர்களாக காணப்படுவதுடன் மற்றும் எனைய மாணவர்கள் தேசிய, சர்வதே மட்டத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்கு இந் நிறுவனம் பாரிய சேவை மேற்கொண்டு வருகின்றது.
உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் பெற்றார்கள் என பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.