அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (3) இரவு சரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது….
குறித் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டில் சம்பவதினமான நேற்று இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது அங்கு சென்ற இராணுவச் சிப்பாய் தனது மனைவி மீதும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர்கள் இருவரும் படுகாயமடைந்ததையடுத்து இராணுவச் சிப்பாய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணையும் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்டதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதலை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் மகியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிசர் மேற்கொண்டுவருகின்றனர்.
(கனகராசா சரவணன்)