மட்டக்களப்பு நகர்பகுதிகளிலுள்ள மின்பிறப்பாக்கிகளிலுள்ள செம்பு கம்பிகளை நீண்டகாலமாக திருடிவந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட செம்பு திருட்டுக் குழுவைச் சேர்ந்த இருவரையும் எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்; இன்று சனிக்கிழமை (04.05.2024) உத்தரவிட்டார்.
கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியிலுள்ள மின்சார சபையின் மின்சார பிறப்பாக்கிகளில் பொருத்தப்பட்டிருந்த செம்பு கம்பிகள் கடந்த 2022, 2023 ம் ஆண்டுகளில் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் ஆலையங்களில் சேம்கு குத்துவிளக்குகள் மின் பிறப்பாக்கிகளில் செம்பு கம்பிகளை திருடிய சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்து விசாரணையில் இந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த திராய்மடு பகுதியைச் சேர்ந்த 4 பேருடன் மின்பிறப்பாக்கிகளின் செம்பு கம்பிகளை திருடியதாக தெரியவந்ததையடுத்து கொக்குவில் பொலிசாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட திருடன் தன்னுடன் சேர்ந்து நகரிலுள்ள பல மின்பிறப்பாக்கிகளிலுள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆலையங்களிலுள்ள செம்பு பாத்திரம் குத்துவிளக்குகளை திருடிச் சென்று விற்பனை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்பு கொண்டதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்து
இதேவேளை தன்னுடன் திருட்டில் ஈடுபட்ட செம்பு திருட்டுக் குழுவைச் சேர்ந்த 4 பேரை காட்டிக் கொடுத்ததையடுத்து பொலிசார் திராய்மடுவைச் சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட செம்பு கம்பிகளை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பழைய இரும்பு விற்பனை கடையில் உருக்கிய நிலையில் மீட்டதுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை (04.05.2024) ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.