கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2024 ஜூலை 5ஆம் திகதியிலிருந்து 7 ஆம் திகதி வரை கட்டுமானம், மின்வலு மற்றும் வலுசக்தி கண்காட்சி – 2024 ஆனது இடம்பெறவுள்ளது.
கட்டுமானம், உள்நாட்டு உற்பத்திப்பொருட்கள், மின்சக்தி மற்றும் வலுசக்தி சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கையின் முன்னிலைக் கண்காட்சியாக கட்டுமானம், மின்வலு மற்றும் வலுசக்திக் காட்சிக்கூடம் அமைகிறது. அதனது எட்டாவது தொடர்ச்சியான வருடத்துடன், இந்தக் காட்சிக்கூடமானது கைத்தொழில் பங்கீடுபாட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் அவர்களது உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்தி, பெறுமதிமிக்க தொடர்புகளை முன்னெடுத்து மற்றும் கைத்தொழில் புத்தாக்கத்திற்கு உந்துதலாக விரிவான தளத்தை ஏற்படுத்துகிறது.
காட்சிக்கூடமானது, கண்காட்சியாளர்களுக்கான புதிய வணிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் அடைவை விரிவுபடுத்துவதற்கும், பயன்படுத்தப்படாத சந்தைகளைத் அணுகுவதற்குமான தளத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கண்காட்சியானது மின்சக்தி, வலுசக்தி, கட்டுமானம், வீடமைப்பு, உட்புற அலங்காரம், கட்டிடம் மற்றும் பொருட்கள் உட்பட பல கைத்தொழில்களை ஒரே இடத்தில் இணைக்கும் பல நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
கைத்தொழில் வாண்மையாளர்களுக்கு இணையற்ற வலையமைப்பு வாய்ப்புகளை வழங்கும் கட்டுமானம், மின்சக்தி மற்றும் வலுசக்தி கண்காட்சிக் கூடம்- 2024 இல் 14,000 இற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 180 இற்கு மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.