இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை   மற்றும் CHEC PORT CITY COLOMBO (PVT LTD) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கொழும்பு துறைமுக நகரத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தை முன்னேற்றம் நோக்கில் பிரதான அதற்கான முதல் ஆரம்பப்படியாக CHEC Port City Colombo (Pvt) Ltd மற்றும் இலங்கை  ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. 

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் கிங்ஸ்லி பேர்னாட் மற்றும்  CHEC Port City Colombo (Pvt) Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்ததில கைச்சாத்திட்டனர். 

முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng உரையாற்றுகையில் “கொழும்புத் துறைமுக நகர பிராந்தியத்தில் விநியோக வர்த்தக  மத்திய நிலையம் மற்றும் நிதி  கேந்திர ஸ்தானமாக அடையாளப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எதிர்கால நடவடிக்கைகளான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து இவ்விசேட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

தெற்காசியாவின் இதயமான இலங்கையின் பெ ருளாதார அபிவிருத்தியை மேலும் முன்னெடுப்பதற்கு இந்நிறுவனங்களுக்கு சந்தர்ப்பங்கள்வழங்குவதுடன் ஏற்றுமதி நோக்காகக் கொண்ட வியாபாரத்திற்கான தந்திரோபாயத்தளமாக கொழும்புத் துறைமுக நகரத்தை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்பினால் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *