பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு அணி தரப்பில் சிராஜ், யஷ் தயாள், விஜய் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபிக்கு விராட் கோலியும், கேப்டன் டூப்ளசிசும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
டூப்ளசிஸ் 23 பந்துகளில் 64 ரன்களும், விராட் கோலி 27 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர்.
7 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், ஸ்வப்னில் சிங் 15 ரன்களும் எடுத்து 13.4 ஓவர்களில் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.