அம்பாறையில் இரு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து 25 பாடசாலை மாணவர்கள் உடட்பட 33 பேர் படுகாயம்
அம்பாறை அக்கரைப்பற்று பிரதான வீதியான கல்லோயா ஈ.சி.சி சந்தியில் இரு பஸ்வண்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (3) பிற்பகல் 2.30 மணினக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இருந்து அம்பாறை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டியும் அம்பாறையில் இருந்து தமண பிரதேசத்திற்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்வண்டியும் அம்பாறை அக்கரைப்பற்று வீதியான ஈ,சி.சி. சந்தியில் சம்பவதினமான பிற்பகல் 2.30 மணிக்கு நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பாடசாலை மாணவர்கள் 25 பேரும் 8 பிரயாணிகள் உட்பட 33 பேர் படுகாயடைந்ததையடுத்து அவர்களை பொலிசார் பொதுமக்கள் ஒன்றினைந்து மீட்டு உடனடியாக அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் இரு; பஸ்வண்டிகளை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
(கனகராசா சரவணன்)