சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்த மழைவீழ்ச்சி நிலவியதாகவும், இதன் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் எதிர்பாராத வேளையில் இந்த சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்துள்ளன.
அதுமாத்திரமன்றி இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.