ரிங்கு சிங் மனம் உடைஞ்சு போயிட்டாரு- ரிங்கு சிங்கின் தந்தை பேட்டி

வெடி வெடிச்சு கொண்டாட தயாரா இருந்தோம்.. ரிங்கு சிங் மனம் உடைஞ்சு போயிட்டாரு- ரிங்கு சிங்கின் தந்தை பேட்டி

நேற்று டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் அதிரடி வீரர் ரிங்கு சிங் இடம்பெறாததால் மனம் உடைந்து போனார் அவரது தந்தை.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருவதை அடுத்து ஜூன் மாதம் அமெரிக்கா வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் உலகக் கோப்பை தொடர் தொடங்க இருப்பதால் ஐபிஎல் முடிந்து சில வாரங்களே இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

இந்த நிலையில் நேற்று 15 பேர் கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த சம்பவங்களும், எதிர்பாரா சம்பவங்களும் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரிங்கு சிங்கின் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய டி20 அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி தன்னை நிரூபித்து இருக்கிறார்.

பினிஷிங் ரோலில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இவரை மகேந்திர சிங் தோனியோடு கம்பேர் செய்து கிரிக்கெட் வல்லுனர்கள் ஒப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் ரிங்கு சிங் இடம்பெறாததை அடுத்து தேர்வுக்குழு வாரியத்தை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.

தனக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்தி விளையாடி இருக்கிறார் இதற்கு மேல் இவர் தன்னை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேள்விகளால் இந்திய தேர்வுக் குழுவை துளைத்தெடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரிங்கு சிங் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அவரது குடும்பத்தாரில் அவரது தந்தை பேட்டி அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவரது தந்தை கூறும் பொழுது
“ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அதனால் நிறைய பட்டாசுகளையும் இனிப்புகளையும் வாங்கி வைத்திருந்தோம். அவர் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்பி இருந்தோம். ஆனால் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றும், 18 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்றும் அவரது தாயாரிடம் ரிங்கு சிங் மனமுடைந்து கூறினார்” என்று அவரது தந்தை கூறியிருக்கிறார்.

ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததை அடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *