T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன் 1 முதல் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
அணித்தலைவராக ரோஹித் சர்மாவும் துணை தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விபரம்:
ரோஹித் சர்மா (தலைவர்), ஹார்திக் பாண்டியா (துணை தலைவர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK) , சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிராஜ்.
ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.