முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார அபிவிருத்தியினை மேம்படைய செய்யும் நோக்கில் (30) முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி நிறுவன அலுவலகத்தில் 16 பயனாளிகளுக்கான வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்ததுடன் பயனாளர்களுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்த உதவித்திட்டமானது ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று முதலான பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்,ஏ.ரமீஸ், நிறுவன உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.