மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தில் 14 ஆயிரத்து 570 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்களை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நடத்திய சோதனையின் போது இச்சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளொன்றின் கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு, இப்போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட போதே, இச்சந்தேக நபர்கள் பிடிபட்டதாகவும், இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.
காத்தான்குடியைச் சேர்ந்த நபர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர்களிடம் காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.