ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு எதுவும் ஆக கூடாது என தான் வேண்டியதாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் உருக்கமுடன் கூறியுள்ளார்.
ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு எதுவும் ஆக கூடாது என தான் வேண்டியதாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் உருக்கமுடன் கூறியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றார். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகாலம் சிகிச்சை பெற்ற அவர் தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்தை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸிடம் பேட்டி அளித்த ஷாருக்கான், ரிஷப் பந்தின் கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியை கண்டு பதறினேன்.
அவர் எனக்கு ஒரு மகனை போன்றவர். அவருக்கு எதுவும் ஆக கூடாது என வேண்டி கொண்டேன். தற்போது அவர் நன்றாக விளையாடி வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. அவர் மேலும் தொடர்ந்து நன்றாக விளையாடுவார் என நான் நம்புகிறேன்.” எனக் கூறினார்.