வட மகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வட மாகாண மல்யுத்த போட்டி (27) யாழ்ப்பாணம் மந்திகையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் அணிகள் பங்குபற்றியதோடு இருபாலாரும் தொடர்ந்து 5வருடமாக சம்பியன் பட்டத்தை வடமாகாணத்தில் நிலை நாட்டி சாதனை படைத்தனர்.
இங்கு திறந்த (open) மல்யுத்த (wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட , ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் முதலிடம் பெற்றுள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மாகாணமட்ட திறந்த (open) மல்யுத்த (wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு, வள்ளிபுனம், தீர்த்தகரை, மாஞ்சோலை, குமுழமுனை, சிலாவத்தை, கொக்குதொடுவாய், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாமூலை, தண்டுவான், பழம்பாசி, மாங்குளம், பாலிநகர் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் பங்குபற்றி வெற்றிவாகை சூடினார்கள்.