அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு கேன் வில்லியம்ஸன் தலைமையில் அனுபவம் கொண்ட நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரி20 உலகக் கிண்ண அணியை அறிவிப்பதற்கான இறுதித் திகதி நாளையுடன் (1) நிறைவடையவுள்ள நிலையிலேயே முதல் அணியாக நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து குழாம்: கேன் வில்லியம்ஸன் (தலைவர்), பின் அலன், டிரென்ட் போல்ட், மைகல் பிரேஸ்வெல், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லொக்கி போர்கியுசன், மட் ஹென்ரி, டரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்சல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி.