மத்திய விளையாட்டு அபிவிருத்தி தினைக்களத்தினால் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 2024.04.29 அன்று வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. குலசிங்கம் திலீபன், மாவட்ட செயலாளர் திரு. பி. ஏ. சரத்சந்ர, மேலதிக மாவட்ட செயலாளர் திரு.தி. திரேஸ்குமார் மற்றும் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.