கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பந்து வீச்சாளரான டெல்லி அணியின் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 35 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணிக்கு, பிலிஃப் சால்ட் சிறப்பான தொடக்கம் அளித்தார். 33 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 68 ரன்களை விளாசினார்.
கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வருண் சக்கரவர்த்தி 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய நிலையில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்தில் நீடிக்கிறது.