ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், பந்து வீச்சாளர்களை விட பேட்டிங் செய்பவர்களுக்கு இம்பேக்ட் விதி சாதகமாக இருப்பதாகக் கூறினார். மேலும் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுக்கும் போட்டிகளாக அமைந்து விடுகிறது. அடுத்த ஆண்டு முதல் பவுலர்கள் இன்னும் சிறப்பாக செயல்படலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான நடராஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த முரளிதரன், “நான் இன்னொரு நாட்டை சேர்ந்தவன் என்பதால் இது குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடராஜன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் பத்திரிகையாளர்கள் தான் அவரை கவனிப்பதில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அவர் தகுதியானவர் தான்” என்று கூறினார்.