கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டைகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 76 ரன்களும், தீபக் ஹூடா 50 ரன்களும் எடுத்தார். ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி.

வழக்கம் போல தொடக்க வீரர் பட்லர் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் பவர் பிளேவில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பட்லர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது யாஷ் தாக்கூர் ஓவரில் போல்டானார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க 7-வது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ரவி பிஷ்னோயிடம் கேட்சைக் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. கடைசிவரை களத்தில் சஞ்சு சாம்சன் 71 ரன்களுடனும் , துருவ் ஜூரல் 52  ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தற்போதுவரை 9 போட்டிகளில் ஆடிய ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியும் தோல்வியும் பெற்றது. அதே நேரத்தில் 9 போட்டிகளில் ஆடிய லக்னோ அணி 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. தற்போது ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *