-கட்சியின் உயர்மட்ட குழுவில் தீர்மானம் –
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இ.தொ.காவின் உயர்மட்ட குழு நேற்று வியாழக்கிழமை தலைமை காரியாலயமான சௌமியபவனில் கூடி இந்த முடிவை எடுத்தது.
இந்தக் கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர்,ராஜதுரை, பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தலைவி அனுசியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இம்முறை இ.தொ.காவின் மேதின கூட்டம் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.