இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து

புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளால் ஆபத்தில் சிக்கக்கூடும் என புகையிரதப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரையான பகுதியில் சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி செல்ஃபி எடுப்பதற்காகவும், சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி முத்தமிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபோன்ற பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள், கடந்த 21ம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துக்கு உள்ளானார்கள் எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த வெளிநாட்டு பெண்களும் விபத்தினால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மலையக புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் புகையிரதங்களில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உள்நாட்டு புகையிரத பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான விபத்துக்களை தடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் புகையிரதங்களில் கடமை புரியும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அங்கு கடமையில் உள்ள பாதுகாப்பு பிரிவினருக்கும் உள்ளது.


முன் கூட்டியே ஆபத்துகளை தடுப்பதன் மூலம் பண விரயம் மற்றும் பயணிகளின் நேரம் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் உல் நாட்டு புகையிரத பயன்பாடுகள்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *