மட்டக்களப்பு வாகரையில் இறால்பண்ணை மற்றும் இல்மைனைற் அகழ்வுகள் ஆதரவு தெரிவித்து அராசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க வந்த குழுவினரை அதற்கு எதிரான பொதுமக்கள் கச்சேரியில் வைத்து எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து விரட்டியடித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (25) பகல் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது
வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணை அமைப்பதற்கும் மற்றும் இல்மைனைற் அகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இறால்பண்னை அமைக்க மற்றும் இல்மைனைற் அகழ்வுகளுக்கு ஆதரவு தெரிவித்து அந்த திட்டங்களை முன்னெடுத்துவரும் தனியர் கம்பனிகளுடைய ஆதரவுடன் அந்த பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவினர் பஸ்வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி சம்பவதினமான இன்று காலை மட்டு நகரிலுள்ள அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு செல்வதற் பஸ்வண்டியில் ஏறியநிலையில் அதனை அறிந்த பிரதேச பொதுமக்கள் ஒன்று திரண்டு குறித்த பஸ்வண்டியை நிறுத்தி அவர்களை கச்சேரிக்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தி அவர்களை பஸ்வண்டியில் இருந்து வெளியே இறக்கினர்.
இதனை தொடர்ந்து பஸ்வண்டியில் இறங்கிய குழுவினர் பிரிந்து தனித்தனியக வேறு பஸ்வண்டியில் ஏறி கச்சேரியை வந்தடைந்தனர். இந்த நிலையில் இல்மனைற் அகழ்வுக்கு எதிர்பு தெரிவித்த பிரதேச பொதுமக்களும் மட்டு நகரை வந்தடைந்து காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனீர்ப்பு ஆர்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர்.
இதன் போது இல்மனைற் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த குழுவினர் கச்சேரிக்கு வந்தடைந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து ஆர்பாட்டகாரார்கள் ஆர்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து அங்கிருந்து கச்சேரியை சென்றடைந்தனர்.
இதன் போது அங்கு இல்மனைற் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க வந்திருந்த குழுவினருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெர்துமக்களுக்கும் இடையே பெரும் வாக்குவாம் இடம்பெற்ற நிலையில் மகஜர் கையளிக்க வந்த குழுவினரை மகஜர் கையளிக்க விடாது அங்கிருந்து விரட்டியடித்தனர்.
(கனகராசா சரவணன்)