காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐடிசி ரத்னதீப விருந்தகம் மற்றும் அதிசொகுசு ரக வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்தியாவின் ஐடிசி நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே மேற்கொண்ட பாரிய முதலீட்டுத் திட்டம் இதுவாகும்.
5.86 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐடிசி ரத்னதீப விருந்தகம் மற்றும் அதிசொகுசு ரக வீட்டுத் தொகுதி 48 மாடிகளைக் கொண்டுள்ளது.
அத்துடன், அதன் உயரம் 224 மீற்றர் என்பதுடன், 352 அதி சொகுசு ரக அறைகள் காணப்படுகின்றன.இந்த விருந்தகம் 2 கட்டடங்களுக்கிடையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை ப்ரிட்ஜ் எனப்படும் வான் பாலமொன்றினால் இணைக்கப்பட்டுள்ளமை அதன் தனிச் சிறப்பாகும்.