சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 2024ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் (Usain Bolt) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) மற்றும் அமெரிக்கா (America) ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ICC கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜமைக்காவின் கரீபியன் தீவில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்த உசைன் போல்ட் உயர்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டிகளை பயின்று வேகமாக ஓடக்கூடிய நபராக மாறினார்.
உலகளாவிய ரீதியில், மிகவும் வேகமாக ஓடக்கூடிய நபராக சாதனை படைத்த உசைன் போல்ட், தற்போது ICC 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.