ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை அஸல்லாம் அலைக்கும் என வரவேற்ற செந்தில் தொண்டமான்!
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.