மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டு காந்தி பூங்காவின் முன்னால் ஞாயிற்றுக்கிழமை (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிர்த ஞாயிறு குண்டுதாக்தல் இடம்பெற்று 5 வருட நினைவு தினத்தையிட்டு கைது சூத்திரதாரிகளை செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவின் முன்னால் பொதுமக்கள் அரசில்வாதிகள், மற்றும் சகூக செயற்பாட்டாளர்கள்,மதகுருமார்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டனா.
இதன் போது அரசே கொலையாளிகளை மறைக்காதே, குண்டுவெடிப்பின் கூத்திரதாரிகளை கைது செய், சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தா, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜ.நாவில் வழங்கிய வாக்கு மூலம் என்னாச்சு, 5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா? போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷ;கள் எழுப்பியவாறு சுமார் ஒருமணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்ட காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
(கனகராசா சரவணன்)