முல்லைத்தீவு மாவட்ட மட்ட யூடோ போட்டி இன்றைய தினம் (22) மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் காலை 10.30 மணிளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் ஆசியுரை வழங்கி யூடோ போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் மாவட்டத்தின் ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ந.முகுந்தன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் இ.சகிதரசீலன், மல்யுத்த பயிற்றுவிப்பாளர் ஜெயதர்சன், கராத்தே பயிற்றுவிப்பாளர் தேசிந்தன் மற்றும் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.